Sunday, April 20, 2008

சிம்மக்கல் சிங்கங்கள்

அக்கிரஹாரத்தில் இருந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில் மனசு லேசாக பறப்பது போல உணர்ச்சி. எட்டு குடித்தனம் (compound store), எல்லாருக்கும் பொதுவான கழிப்பறை, குளியலறை என்று. ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு ரகம். சிலர் வீட்டுக்குள்ளே என்ன நடப்பதென்று யாருக்கும் தெரியாமல் செய்வதும், சிலர் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கையை வெளியிலேயே எல்லோருக்கும் அறிவித்து நடத்துவதும் என்று சுவராசியமான வாழ்க்கை.

எல்லோருக்கும் பொதுவாக மொட்டை மாடி. காரை தரை கர கரவென்று. வீட்டுச் சொந்தக்காரனுக்கு வாடகைகளே வருமானம் என்பதால் எந்தவித பராமரிப்பும் செய்யாத வீடு. இதில் வாடகைக்கு இருக்கும் குடித்தனக் காரர்கள் ஏதோ ஜென்ம ஜென்மாந்திரமாக அந்த வீட்டிலேயே இருப்பதாக வீட்டைக் காலி செய்து வேறு இடம் மாறுவதை கருதாமல் இருந்ததால் வீட்டுச் சொந்தக்காரனும் கவலையேதும் இன்றி எந்தவித முன்னேற்றமும் செய்யாது இருந்தான்.

அடுத்த பதிவில் ஒவ்வொரு வீட்டின் சுவராசியமான விபரங்களைத் தருகிறேன்.